<> உணவு, கழிப்பிட வசதியுடன் கிளாசிக் பேருந்துகள் - முதல்வர் தொடங்கி வைத்தார்    <> அரசு பள்ளியில் ரூ.2 லட்சம் மதிப்புள்ள 13 லேப்டாப்கள் திருட்டு !    <> என்.எல்.சி. பங்குகள் விற்பனை - மத்திய அரசு இன்று முடிவெடுக்கும் என தகவல்    <> 2 வது அரையிறுதி - இந்தியா-இலங்கை இன்று பலபரீட்சை    <> காங்கிரஸின் நிலை குறித்து விரைவில் முடிவு    <> ஆசிரியர் தகுதித் தேர்வு: 4.24 லட்சம் விண்ணப்பங்கள் விற்பனை     1- Major Fire in Cubbon Park BSNL Office     2- Family Of Four Attempt Suicide In Bangalore     3- Young Married woman Gang-raped     4- Low-lying Areas Along Yamuna in Delhi Flooded     5- Militants Kill 6 Soldiers in Pakistan     6- Brazil Officials Reverse Subway Bus Fare Hike     7- Haze From Sumatras Forest Fires Chokes Three Nations     8- Thousands Feared Dead In Uttarakhand     9- Top Heroines In Item Song     10- Advance Booking Directors of Tollywood   செய்திகளை தமிழில் படிக்க    >>

பில்லா 2 புக்கிங் ஃபுல்..டிக்கெட் விலை ரூ 650!!                                                     தமிழில் படிக்க

 >> Home  >> Tamil  >> Latest Tamil News  >> பில்லா 2 புக்கிங் ஃபுல்..டிக்கெட் விலை ரூ 650!!

பில்லா 2 புக
   (2012-07-11 00:00:00)

ரஜினி - கமல் என்ற வரிசைக்கு அடுத்த நடிகர்களில் நல்ல ஓபனிங் என்றால் அது அஜீத் படத்துக்குதான்.

ப்ளாப் படமாக இருந்தாலும் அஜீத் படத்துக்கு முதல் 5 நாட்களுக்கு டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்துவிடுவது வழக்கம்.

மங்காத்தா என்ற வெற்றிக்குப் பிறகு அஜீத் நடிப்பில் வரும் படம் பில்லா 2. இந்தப் படத்தில் அஜீத், யுவன் சங்கர் ராஜா தவிர, வேறு தெரிந்த முகங்கள் இல்லை.

இயக்குநர் சக்ரிக்கு ஒரு வகையில் இதுதான் முதல் படம். இதற்கு முன் அவர் உன்னைப் போல் ஒருவனை இயக்கினாலும், அதில் கமலின் பங்களிப்பு எல்லோருக்கும் தெரிந்த ஒன்றே.

நாயகிகள் பார்வதி ஓமனக்குட்டன், ப்ருனா அப்துல்லா இருவருக்குமே இது முதல் படம். எனவே அவர்களால் படத்துக்கு பெரிய பலன் கிடையாது.

இருந்தும் அஜீத் படம் என்ற ஒரே காரணத்துக்காக சென்னை திரையரங்குகளில் பில்லா 2 க்கு ஒரு வாரத்துக்கான புக்கிங் முடிந்துவிட்டது.

பல இடங்களில் ப்ளாக்கில் ரூ 500 வரை இந்தப் படத்துக்கு டிக்கெட் விற்கப்பட்டு வருகிறது. சென்னையில் ஒரு அரங்கில் கவுன்டரிலேயே 650 ரூபாய்க்கு முதல் காட்சிக்கான டிக்கெட் விற்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.


Tags: