என் காதலன் யார் என்பதை விரைவில் நானே அறிவிக்கிறேன் என்று நடிகை த்ரிஷா கூறியுள்ளார். எப்போதும் பிஸியாகும் ஒரே நடிகை த்ரிஷா மட்டும் தான். தமிழ், தெலுங்கு என்று மாறி மாறி நடித்து வரும் த்ரிஷா, இப்போது தமிழில் விஷாலுடன் சமரன் படத்திலும், தெலுங்கில் ஜூனியர் என்.டி.ஆர். உடன், தம்மு என்ற படத்திலும் நடித்து வருகிறார். தற்போது தம்மு படத்தின் சூட்டிங் பொள்ளாச்சியில் நடந்து வருகிறது.
சூட்டிங் இடைவெளியின் போது பேட்டியளித்த த்ரிஷா, என்னைப் பற்றி நிறைய வதந்திகள் வருகிறது. அதை எல்லாத்தையும் பார்க்கும் போது சிரிப்பு தான் வருகிறது. அதிலும் குறிப்பாக தெலுங்கு நடிகர் ராணாவுடன் காதல் என்று அடிக்கடி செய்திகள் வருகிறது. இதுதொடர்பாக நானும் பலமுறை விளக்கம் அளித்துவிட்டேன். ராணா எனக்கு நல்ல நண்பர் அவ்வளவு தான். என்னுடைய திருமணத்திற்கு இன்னும் வெகுநாட்கள் இல்லை. என் காதலன் யார், என்னை மணக்கபோகும் அந்த நபர் யார் என்பதை விரைவில் நானே உங்களுக்கு அறிவிக்கிறேன் என்று கூறியுள்ளார்.
|