திமுகவினரை சிறையில் அடைப்பது வீண்-ஜெயலலிதா
சென்னை: மக்களை ஏமாற்ற திமுக நடத்திய சிறை நிரப்பும் போராட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களை சிறையில் அடைப்பது வீண் என்று தான் அவர்களை விடுவிக்குமாறு உத்தரவிட்டேன் என்று முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
திமுகவினர் மீது பொதுமக்களால் கொடுக்கப்பட்ட நில அபகரிப்பு புகார்களின் மீது எடுக்கப்படும் நடவடிக்கையினை திசை திருப்பி மக்களை ஏமாற்றும் விதமாக திமுகவால் இந்த போராட்டம் நடத்தப்பட்டது.
மக்களை ஏமாற்றும் விதமாக நடத்தப்பட்ட இந்த போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்து சிறையில் அடைப்பது அரசுக்கும், காவல்துறைக்கும் ஒரு பயனற்ற பணியாகத் தான் அமையும் என்பதால், இந்த போராட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களை விடுவித்துவிடும்படி நான் காவல் துறையினருக்கு உத்தரவிட்டேன். எனது உத்தரவின்படி போராட்டத்தில் ஈடுபட்ட திமுகவினர் அனைவரும் விடுவிக்கப்பட்டுவிட்டனர் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.