அமிதாப்பச்சன் ஜோடியாக குஷ்பு
நடிகை குஷ்பு தி.மு.க.வில் சேர்ந்து அரசியல் கூட்டங்களில் பங்கேற்று வருகிறார். டி.வி. நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி வருகிறார். குஷ்புவுக்கு அவந்திகா, அனந்திதா என இரு மகள்கள் உள்ளனர். குழந்தைகளை கவனிப்பதற்காக படங்களில் நடிக்காமல் ஒதுங்கி இருந்தார்.
நீண்ட இடைவெளிக்குப் பின் ‘மேட் டாட்’ என்ற இந்திப் படத்தில் குஷ்பு நடிக்க ஒப்புக் கொண்டு உள்ளார். இதில் அமிதாப்பச்சன் ஜோடியாக நடிக்கிறாராம்.
அமிதாப்புடன் நடிக்கப் போவதால் மகிழ்ச்சியில் இருக்கிறார். சிறு வயதில் இருந்தே அமிதாப்புக்கு குஷ்பு தீவிர ரசிகை. அவர் படங்களை ஒன்று விடாமல் பார்ப்பாராம். இப்போது அமிதாப் ஜோடியாக நடிக்க வாய்ப்பு வந்துள்ளதால் சந்தோஷத்தில் இருக்கிறார். குஷ்புவின் மகள்களும் இதன் மூலம் அமிதாப்பச்சனை சந்திக்கும் ஆர்வத்தில் இருக்கிறார்கள்.