'மெரினா' படம் கொடுத்த வரவேற்பை தொடர்ந்து பாண்டிராஜின் அடுத்து இயக்க போகும் படம் என்ன என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
இந்த ஆண்டு இதுவரை 'மெரினா' தான் விநியோகஸ்தர்களுக்கு அதிக லாபத்தை கொடுத்து இருக்கிறதாம். முதல் வாரத்தில் சென்னை ஏரியாவின் விநியோகஸ்தர்கள் பங்கு மட்டும் சுமார் 45 லட்சம் என்கிறார்கள்.
" நான் அடுத்து இரண்டு படங்கள் கழித்து தான் சிறுவர்களை வைத்து படம் இயக்குவேன். என்னிடம் ஏழரை வயது சிறுவனைச் சுற்றி நடக்கும் கதை ஒன்று தயாராக இருந்தாலும் அதை நான் இப்போதைக்கு இயக்க மாட்டேன்" என்று தெரிவித்தார் பாண்டிராஜ்.
இந்நிலையில் விக்ரமிடம் பாண்டிராஜ் ஒரு காமெடி கலந்த காதல் கதையைச் சொன்னாராம் பாண்டிராஜ். விக்ரமுக்கு அந்த கதை மிகவும் பிடித்திருந்ததாம். 'தாண்டவம்' படத்தை முடித்த பிறகு இப்படத்தை தொடங்கலாம் என திட்டமிட்டிருக்கிறார்களாம்.
|