புதுவையில் உதவித்தொகை ரூ.1,100-ஆக உயர்வு-ரங்கசாமி அறிவிப்பு
புதுவை மாநிலத்தில் வழக்கமாக மார்ச் மாதம் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். ஆனால் மத்திய திட்டக்குழு புதுவைக்கு நிதி ஒதுக்கீடு செய்ய தாமதமானதால் மார்ச் மாதம் பட்ஜெட் தாக்கல் செய்யப்படவில்லை. கடந்த மாதம் 25-ந்தேதி புதுவைக்கு மத்திய திட்டக்குழு நிதி ஒதுக்கீடு செய்தது.
இதையடுத்து இன்று பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இன்று பகல் 12.15 மணிக்கு பட்ஜெட் கூட்டம் தொடங்கியது. முதல்-அமைச்சர் ரங்கசாமி பட்ஜெட்டை தாக்கல் செய்து உரை நிகழ்த்தினார்.
பட்ஜெட்டில் அவர் வெளியிட்டுள்ள அறிவிப்புகள் வருமாறு:-
* தானே புயலில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தென்னங்கன்று இலவசமாக வழங்கப்படும்.
* புதுவையில் வேளாண் பல்கலைக்கழகம் தொடங்கப்படும்.
* பாசிக் நிறுவனத்தை சீர்செய்ய ரூ.15 கோடி நிதி உதவிஅளிக்கப்படும்.
* கறவை மாடுகள், வண்டிமாடுகள் இறந்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.15 ஆயிரம் வழங்கப்படும்.
*கூட்டுறவு சங்க விவசாயிகளுக்கு மழைக்கால உதவித்தொகை ரூ.3 ஆயிரமாக உயர்த்தப்படும்.
*நெசவாளர் மாத ஊதியம் ரூ.1,350-ஆக உயர்த்தப்படும்.
*மாணவர்களுக்கு கூடுதலாக 50 இலவச பஸ்கள் இயக்கப்படும்.
*புதுவையில் தொழில் வணிக மையம் அமைக்கப்படும்.
*முதியோர் மற்றும் விதவை மாதாந்திர ஓய்வூதியம் ரூ.1000-ல் இருந்து ரூ.1,100-ஆக உயர்த்தப்படும்.
இவ்வாறு பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது.