<> என்.எல்.சி. பங்குகள் விற்பனை - மத்திய அரசு இன்று முடிவெடுக்கும் என தகவல்    <> 2 வது அரையிறுதி - இந்தியா-இலங்கை இன்று பலபரீட்சை    <> காங்கிரஸின் நிலை குறித்து விரைவில் முடிவு    <> ஆசிரியர் தகுதித் தேர்வு: 4.24 லட்சம் விண்ணப்பங்கள் விற்பனை    <> பிரதமர் வேட்பாளராக ராகுல் நிறுத்தப்படுவார்    <> பொதுத்தேர்வுகளில் முதல் இடம் - மாணவர்களுக்கு முதல்வர் ரொக்கப்பரிசு வழங்கினார்     1- Young Married woman Gang-raped     2- Low-lying Areas Along Yamuna in Delhi Flooded     3- Militants Kill 6 Soldiers in Pakistan     4- Brazil Officials Reverse Subway Bus Fare Hike     5- Haze From Sumatras Forest Fires Chokes Three Nations     6- Thousands Feared Dead In Uttarakhand     7- Top Heroines In Item Song     8- Advance Booking Directors of Tollywood     9- Trivedi Admits To Taking Money From Bookies     10- Stage Set For Asian Supremacy Thriller   செய்திகளை தமிழில் படிக்க    >>

இந்த பைக்கின் விலை ரூ.1.6 கோடிதான்!                                                     தமிழில் படிக்க

 >> Home  >> Tamil  >> Latest Tamil News  >> இந்த பைக்கின் விலை ரூ.1.6 கோடிதான்!

இந்த பைக்கி
   (2012-07-05 00:00:00)

பைக்குகள் விலையை லட்சங்களில் கேட்டிருக்கிறோம். ஆனால், கோடிகளில் கேட்டதுண்டா. ஆம், படத்தில் நீங்கள் பார்க்கும் பைக்கின் விலை 1.6 கோடி ரூபாய்.

அமெரிக்காவை சேர்ந்த பைக் பந்தய வீரரின் கனவு நனவாக்கிய பைக் மாடல்தான் இது. ஈக்கோஸீ என்ற நிறுவனம் தயாரிக்கிறது.

அதுசரி, எல்லா பைக்குகளை போன்றுதானே இருக்கிறது. அப்புறம் ஏன் இந்த விலை என்று கேட்கிறீர்களா. இந்த பைக்கின் தொழில்நுட்பமும், பயன்படுத்தப்பட்டு இருக்கும் பொருட்களும் அப்படி.

ஒரு எஸ்யூவி காரில் பொருத்தப்படும் அளவுக்கு திறன் கொண்ட 2.0 லிட்டர் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்சின் சாலிட் பில்லெட் அலுமினியத்தால் தயாரிக்கப்படுகிறது.

இதன் சேஸிஸ் 4130 க்ரோம்-மோலி டிக் உலோகத்தால் உருவாக்கப்பட்டுள்ளது. இது இலகு எடையுடன் அதிக உறுதித்தன்மையை கொண்டது.

போர்க்குகள் மற்றும் ஷாக் அப்சார்பர்களை அட்ஜெஸ்ட் செய்யும் வசதிகொண்டது. டூவல் 6 பிஸ்டன்களுடன் 12 பிரேக் பேடுகள் கொண்ட முன்பக்க பிரேக் பொருத்தப்பட்டு இருப்பதால் நினைத்த இடத்தில் பிரேக் பிடித்து வண்டியை நிறுத்திவிடலாம்.

0-100 கிமீ வேகத்தை வெறும் 2.8 வினாடிகளில் சீறிப்பாய்ந்து எட்டிவிடும். அமெரிக்காவில் 3 லட்சம் டாலர் விலையில் விற்பனை செய்யப்படும் இந்த பைக்கை இந்தியாவில் இறக்குமதி செய்ய வேண்டுமானால் 1.6 கோடி செலவாகும். இதுவரை மொத்தம் 11 பைக்குகள் மட்டுமே தயாரிக்கப்பட்டுள்ளது.


Tags: